Monday, 18 July 2011

காதல் ஆடிய வெறி

     அன்று ஒரு நாள் நான் என் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தேன். மழை சாரல் பெய்யும் காலை நேரம் அது. அவள் முகம் மிகவும் கேவலமாக இருந்தது.ஏனென்றால் மழை பெய்திருந்த நேரம் கும்மிருட்டு அதனால் அவள் எனக்கு அப்படி தெரிந்தால், அதற்குள் ஒரு கேள்வி எல்லா ஆண்களுக்கும் அழகான பெண்களை தான் பிடிக்குமா ?

யார் வேண்டுமானாலும் அப்படி இருக்கலாம், நான் அப்படி கிடையாது .
என் மனம் சொல்ல கேட்டேன் . அதற்குள் அவள் மறைந்து விட்டாள்.

ஏனெனில், அவளுக்கும் பள்ளிக்கு தாமதாமாகி விட்டது . எனக்கும் பள்ளிக்கு தாமதமாகி விட்டது ..

காலங்கள் உருண்டு ஓடியது. எனக்கு அல்ல அவளுக்கு, எனக்கு அவள் நினைவுகள் இருந்தது அதனால் எனக்கு கவலை இல்லை .

புத்தகத்தை திறந்தால் கண்களில் என்னமோ புத்தகத்தின் வரிகள், ஆனால் கண்களின் கரு விழியில் அவளது நினைவுகளின் மாயை.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தோம் சிரித்தோம் பின்பு தவறாக இல்லை பேசினோம் . பிறகு தெரிய வந்தது . என் நன்பனின் தங்கை என்று.

வெறியாட்டம் ஆரம்பம்
    
  இருந்தால் என்ன என்றது என் மணம், ஒரு புறம் உயிர் நண்பன். மறுபுறம் காதல் படுத்தும் பாடு சிலமாதம் சென்றது. காதல் அறிகுறிகள் தெரிந்ததாக தோன்றியது.
முடியும் என்று நினைத்து நம்பி அவளுக்கு கடிதம் எழுத நினைத்தேன், ஆனால் என் நண்பன் ஒருவன் எனக்கு உதவி பண்ண வேண்டும் என நினைத்து என் பெயரை போட்டு அவன் அவளுக்கு ஒரு காதல் கடிதம் கொடுத்தான்.
அதற்கு அவள் சொன்ன கவிதை..
’’டேய் தெரு நாய்க்கும் வீட்டு நாய்க்கும் வித்தியாசம் உண்டு நம்ப எல்லாம் வீட்ல வளந்தவங்க’’.

நமக்கு எல்லாம் ரூல்ஸ் இருக்கு தெருநாய்க்கு ரூல்ஸ் கிடையாது. அதனால் இந்த தப்ப திரும்ப செய்யாத என்றால்.......

சில வருடங்களுக்கு பிறகு பார்த்தேன் அவள் ஒருவனை கல்யாணம் பன்னி கொண்டால், மகிழ்ச்சி தான் ஆனால் அவளது கல்யாணம் வீட்டுக்கு தெரியாமல் நடந்து இருக்கு,ஓடிப்போய் கல்யாணம்..

இப்ப சொல்லுங்க யார் வீட்டு நாய், யார் தெரு நாய்........................?

2 comments:

  1. வீட்டு நாய் கூட தெரு நாய் ஆகும்.
    ஆனால் தெரு நாய், வீட்டு நாய் ஆக முடியுமா...?

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிலை நான் மனம் உகர்ந்து எற்றுக்கொள்கிரேன்

      Delete